அமிஸ்மிஸ், செப் 11: மொராக்கோவை வெள்ளிக்கிழமை தாக்கிய வலுவான
நிலநடுக்கத்தில் குறைந்தது 2,122 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,421 பேர்
காயமடைந்தனர் என்று மொராக்கோ உள்துறை அமைச்சகத்தின் ஞாயிற்றுக்கிழமை
புதுப்பிப்பு தெரிவிக்கிறது.
அல் ஹவுஸ் மாகாணத்தில் மொத்தம் 1,351 பேரும், தாருடான்ட் மாகாணத்தில் 492
பேரும், சிச்சௌவாவில் 201 பேரும், மராகேஷில் 17 பேரும் உயிரிழ்ந்ததாக
அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அன்றைய நாள் மரகேஷில் வசிக்கும் மக்கள் நில அதிர்வுகளை உணர முடிகிறது என்று
சின்ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மரகேஷ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300,000க்கும்
அதிகமான மக்களை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு
தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொராக்கோவை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:11 மணியளவில் (2211
GMT) 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது என அமெரிக்க புவியியல் ஆய்வு
தெரிவித்தது.
-பெர்னாமா-சின்ஹுவா








