ANTARABANGSA

தெமர்லோவில் மேற்கு நோக்கி செல்லும் சாலையில் விரிசல்

11 செப்டெம்பர் 2023, 7:20 AM
தெமர்லோவில் மேற்கு நோக்கி செல்லும் சாலையில் விரிசல்

குவாந்தான், செப் 11: நேற்று தெமர்லோவில் மேற்கு நோக்கி செல்லும் சாலையில்

கிலோமீட்டர் (கிமீ) 118.2 முதல் KM117.8 வரை விரிசல் ஏற்பட்டுள்ளதை அனே (ANIH)

பெர்ஹாட் உறுதி செய்தது.

அனே பெர்ஹாட் அவசரகால மற்றும் விரிசல் ஏற்பட்ட பாதைகளை மூடிவிட்டு KM116.5

இலிருந்து KM119.4 வரை மாற்று வழியை செயல்படுத்தியது.

பயனர்கள் கவனமாக வாகனங்களைச் செலுத்தவும், அறிவிப்பு பலகை மற்றும்

ஊழியர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும் கேட்டு கொள்ளப்படுகின்றனர்      என அனே முகநூல் மூலம் தெரிவித்தது.

இந்த விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

மேலும், இதனால், எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்படவில்லை.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.