புகைமூட்டப் பிரச்சனைக்கு எதிராக மலேசியா உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

10 செப்டெம்பர் 2023, 10:41 AM
புகைமூட்டப் பிரச்சனைக்கு எதிராக மலேசியா உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

கோலாலம்பூர், செப் 10- புகைமூட்டப் பிரச்சனை மீண்டும் நாட்டைத் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சுகாதாரம் மீதான அச்சம் மலேசியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 இந்த புகைமூட்டப் பிரச்சனை காரணமாக ஏற்படக்கூடிய உடலாரோக்கியப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உரிய மற்றும் ஆக்ககரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

புகைமூட்டப் பிரச்சனையைத் தொடர்ச்சியாக எதிர்கொள்வதன் மூலம் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்று சன்வே மருத்துவமனயின் சுவாச மற்றும் உள்மருத்துவ சிகிச்சைப் பிரிவு டாக்டர் கோவ் கென் சியோங் கூறினார்.

காற்றுத் மாசுபாடு மற்றும் புகைமூட்டம் உள்ளிட்ட பிரச்சனைள் திடீர் மரணங்களுக்கு காரணமாக உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் நாடு முழுவதும்  பதிவான மரணச் சம்பவங்களில் கடுமையான சுவாசப் பிரச்சனைகள் தொடர்பான மரணங்கள் மூன்றாவது இடத்தில் இருந்தன என்று அவர் சொன்னார்.

மலேசியாவைப் பொறுத்த வரை கடந்த 2020ஆம் ஆண்டில் அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் மரணமடைவோர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இறப்போரில் 12 விழுக்காட்டினரும் இத்தகைய சுவாசப் பிரச்சனைகளை எதிர்நோக்கியவர்களாவர் என்றார் அவர்.

புகைமூட்டம் இந்நாட்டில் தொடர்ச்சியாக இருந்து வரும் பிரச்சனை என்பதை நாட்டு மக்கள் கருத்தில் கொண்டு தங்கள் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.