ஷா ஆலம், ஆலம், செப் 8- இவ்வாண்டு தீபாவளித் திருநாளை முன்னிட்டு
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இரு இடங்களில் தீபாவளிச்
சந்தைக்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்தையில் கடைகளைப் பெற
விரும்புவோர் இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை
இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சுங்கைவே ஜாலான் எஸ்.எஸ்.9ஏ/13 மற்றும் ஜாலான் ஓத்மான் சந்தை
வளாகம் ஆகிய இடங்களில் இந்த தீபாவளிச் சந்தை நடத்தப்படும் என்று
மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த சந்தைக்காக சுங்கைவேயில் 18 கடைகளும் ஜாலான் ஓத்மானில் 12
கடைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
இந்த தீபாவளி சந்தை தொடர்பான விளக்கங்கள் அல்லது கூடுதல்
தகவல்களுக்கு மாநகர் மன்றத்தின் லைசென்ஸ், மேம்பாடு, வர்த்தகம்
மற்றும் தொழில்முனைவோர் பிரிவை 03-79541560/ 79604667 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




