கோலாலம்பூர், ஆக 25 - பொதுச் சேவைத்
துறை தலைமை இயக்குநர் சம்பந்தப்பட்ட
ஊழல் விசாரணை தொடர்பாக ஆகஸ்டு
23ஆம் தேதியிட்ட பத்திரிகை அறிக்கையை
வெளியிட்டதாகக் கூறப்படுவதை மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.)
மறுத்துள்ளது.
இதுபோன்ற போலி அறிக்கையை
வெளியிடுவது என்பது குரோத நோக்கம்
கொண்ட மற்றும் பொதுமக்களிடம் தவறன
கருத்தைப் பரப்பும் நோக்கிலானச் செயலாகும்
என்று எம்.ஏ.சி.சி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
எனவே, எந்தவொரு உறுதியற்ற அல்லது
தவறான தகவலையும் பரப்பவோ அல்லது
பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள்
அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஆணையம்
கூறியது.
பொதுச் சேவைத் துறைத் தலைமை
இயக்குநர் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமது
சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை
எம்.ஏ.சி.சி.விசாரிக்கிறது எனும்
தலைப்பிலான ஊடக அறிக்கையை
குறிப்பிட்டு இந்த அறிக்கையை அந்த
ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.








