புத்ராஜெயா, ஆக 25 - தாய் மொழிப்
பள்ளிகளில் பிற மொழிகளைப்
பயிற்றுவிப்பது கூட்டரசு அரசியலமைப்புச்
சட்டத்தை மீறாது. காரணம், அந்தப்
பள்ளிகளில் தேசிய மொழி கட்டாயப்
பாடமாக கற்பிக்கப்படுகிறது என்று
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று
கூறப்பட்டது.
அந்த தாய்மொழிப் பள்ளிகளும் பொதுவான
பாடத்திட்டங்களுக்கு உட்பட்டுள்ளன என்று
இந்த வழக்கில்
கல்வி அமைச்சர் மற்றும் மலேசிய
அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் கூட்டரசு மூத்த
வழக்கறிஞர் லியூ ஹார்ங் பின் நீதிமன்றத்தில்
தெரிவித்தார்.
தாய்மொழிப் பள்ளிகளில் பயிற்றுவிப்பு
மொழியாக பிற மொழிகளைப்
பயன்படுத்துவது வரலாற்று ரீதியாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு கூட்ஆடரசு
அரசியலமைப்புச் சட்டத்தின் 152 ஆம்
பிரிவிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்று
அவர் சொன்னார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தற்காத்துப்
பேசிய அந்த மூத்த கூட்டரசு வழக்கறிஞர்,
152ஆம் பிரிவுத் தொடர்பான தெளிவான
புரிதலுக்கு ஏற்ப வரலாற்று ஆவணங்கள்
மற்றும் நிகழ்வுகளின் விரிவான ஆய்வு
முக்கியமானது என்று வாதிட்டார்.
நாங்கள் வரலாற்றால்
உருவாக்கப்பட்டவர்கள். வரலாறு என்பது
நாம் யார்?, ஏன் நாம் அப்படி இருக்கிறோம்?"
என்பதை விவரிக்கிறது என்று லியூ கூறினார்.
மலாய் மொழியை தேசிய மொழியாக
நிலைக்க வைக்கும் அதே நேரத்தில் கல்வி
அமைப்பில் பிற மொழிகளின் பயன்பாட்டைப்
பாதுகாத்து நிலைநிறுத்துவது அரசியலமைச்
சட்டத்தின் 152 வது பிரிவின் நோக்கமாகும்
என்றும் அவர் விவரித்தார்.
இந்த வழக்கில் நிவாரணம் கோரும்
இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம்
(மாப்பிம்) மற்றும் மலேசிய எழுத்தாளர்கள்
சங்க கூட்டமைப்பு (கபேனா), இக்கத்தான்
முஸ்லிமின்
மலேசியா (இஸ்மா) மற்றும் மலேசிய முஸ்லிம்
ஆசிரியர்கள் சங்கம் (ஐ-குரு) ஆகிய
அமைப்புகளின் நடவடிக்கை சட்ட
வரைவுகளின் நோக்கத்திற்கு எதிரானது
என்பதோடு இது நாட்டின் அரசியலமைப்புச்
சமநிலையின் அடிப்படைத் தூணை
அழித்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாப்பிம், கபேனா, இஸ்மா மற்றும் ஐ-குரு
ஆகிய தரப்பினர் கொண்டு வந்த
மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள்
டத்தோ சுபாங் லியான், டத்தோ எம்.
குணாளன் மற்றும் டத்தோ அஜிசுல் அஸ்மி
அட்னான் ஆகியோர் அடங்கிய மூன்று
நீதிபதிகள் குழு விசாரிக்கிறது.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி
டத்தோ முகமட் நஸ்லான் முகமது கசாலி
(இப்போது மேல்முறையீட்டு நீதிமன்ற
நீதிபதி) டிசம்பர் 29, 2021அன்று தள்ளுபடி
செய்ததைத்
தொடர்ந்து சம்பந்தப்பட்டத் தரப்பினர் ம
மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஐ-குரு அமைப்பினர் செய்த மனுவை
கடந்தாண்டு மே 29ஆம் தேதி தள்ளுபடி
செய்த கோத்தா பாரு உயர்நீதிமன்ற
நீதித்துறை ஆணையர் அபாசாஃப்ரீ முகமது
அப்பாஸ், (இப்போது உயர்நீதிமன்ற நீதிபதி)
தாய்மொழிப் பள்ளிகளின் உருவாக்கம்
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது
என்று தீர்ப்பளித்தார்.








