NATIONAL

66 வது தேசிய தின கொண்டாட்டத்தில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெறும்

24 ஆகஸ்ட் 2023, 10:56 AM
66 வது தேசிய தின கொண்டாட்டத்தில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெறும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: பிரபல கலைஞர்களான ஏவி, ஜியானா ஜைன் மற்றும் இமான் டிராய் ஆகியோர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாநில அளவில் நடைபெறவுள்ள 66 வது தேசியத் தின கொண்டாட்டத்தில் நிகழ்ச்சிகளை படைப்பர்.

ஷா ஆலம் சுதந்திர அரங்கில் மாலை 4.45 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் கலகலப்பாக அமையும் என மாநிலச் செயலர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதில் மௌன அணிவகுப்பு, டி-பேட்டன் நிகழ்ச்சி, செப்போ யங்ஸ்டர்ஸ் நடனம் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறும்.

இம்முறை கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்த அனைத்து சிலாங்கூர் குடிமக்களும் ஷா ஆலம் சுதந்திர அரங்கிற்குத் திரளாக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.