ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், கிளந்தான், திரங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலை தான் நிலவும் என முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.








