MEDIA STATEMENT

பண்டார் எல்மினாவில்  விமானம் விழுந்து நொறுங்கியது

17 ஆகஸ்ட் 2023, 10:07 AM
பண்டார் எல்மினாவில்  விமானம் விழுந்து நொறுங்கியது

முன் வந்த செய்திகள்.

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: இன்று மதியம் பண்டார் எல்மினா அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் ஒன்று சாலையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 6 பயணிகள் மற்றும்   விமானி மற்றும் உதவியாளர் கொல்லப்பட்டதாக  அறியப்பட்டுள்ளது.

விமானம் சாலையில் விழுந்ததால் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி மற்றும்  கார் ஒன்றும் சிக்கியதாக  அறியப்படுகிறது.

சம்பவத்தை உறுதி செய்த ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம், தனது குழு தற்போது சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.