NATIONAL

விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சிடம் உணவு பாதுகாப்புத் தீர்மானம் சமர்பிக்கப்பட்டது

17 ஆகஸ்ட் 2023, 3:47 AM
விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சிடம் உணவு பாதுகாப்புத் தீர்மானம் சமர்பிக்கப்பட்டது

செர்டாங், ஆக 17- அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்களின் வாயிலாக

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், நெல் விவசாயிகளின் திறனை

மேம்படுத்தும் பரிந்துரைகளை உள்ளடக்கிய உணவு பாதுகாப்பு தீர்மானம்

விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சிடம்

சமர்பிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கான தேசிய உணவு பாதுகாப்பு மாநாட்டில்

நிபுணர்களுக்கும் துறை சார்ந்த பங்களிப்பாளர்களுக்கும் இடையே

நடைபெற்ற கலந்துரையாடலின் வாயிலாக உருவாக்கப்பட்ட இந்த

தீர்மானத்தை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபுவிடம் மலேசிய புத்ரா

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ முகமது

ரோஸ்லான் சுலைமான் வழங்கினார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுக்கு பின்னர் நடைபெற்ற

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வேளாண் மற்றும் உணவு

பாதுகாப்பு கொள்கைக்கான இலக்கை வகுப்பதில் அமைச்சுக்குச் சரியான

தளமாக இந்த தீர்மானம் விளங்கும் என்று சொன்னார்.

இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்களும் பிரச்சனைகளும்

எழுப்பப்பட்டன. அவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் இதில்

முன்வைக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

வருமானம் தாமதமாக கிடைப்பது, அப்படியே கிடைத்தாலும் அதிகமாக

இல்லாதது காரணங்களால் இளம் தலைமுறையினர் விவசாயத்

துறையில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. ஆயினும், தற்போதுள்ள

நவின விவசாய முறை அத்தரப்பினரை அதிகம் ஈடுபடச் செய்கிறது என்று

அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் 340 பேராளர்கள் பங்கு கொண்ட வேளையில்

மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் வேளாண் தொழில் துறை மற்றும் அரசாங்கத் துறைகளை சேர்ந்த 36 கண்காட்சியாளர்களும் பங்கு கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.