ஷா ஆலம், ஆகஸ்ட் 16: இன்று சிலாங்கூரில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை
பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங்
மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று
முகநூல் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இதே வானிலை தான் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், திரங்கானு, பகாங்,
கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜொகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய
மாநிலங்களிலும் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.








