NATIONAL

தாயின் முன்னாள் காதலன் ஆறு வயது சிறுமியைத் துஷ்பிரயோகம்

15 ஆகஸ்ட் 2023, 8:58 AM
தாயின் முன்னாள் காதலன் ஆறு வயது சிறுமியைத் துஷ்பிரயோகம்

ஜொகூர் பாரு, ஆகஸ்ட் 15: கம்போங் சினாரன் பாரு, கெம்பாஸில் உள்ள வீட்டில் தாயின் முன்னாள் காதலன் ஆறு வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படுகிறது.

நேற்று காலை 10.39 மணியளவில் 25 வயதான பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடமிருந்து தனது தரப்புக்கு  புகார்  கிடைத்தது என ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமட்  கூறினார்.

அதனைத் தொடர்ந்து நேற்றிரவு 11.05 மணியளவில் 29 வயதுடைய உள்ளூர் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"அச்சிறுமிக்கு உதடு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. பின், மேல் சிகிச்சைக்காகச் சுல்தானா அமினா மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஜொகூர் பாரு நீதிமன்றத்தில் இன்று காலை அந்நபரைத் தடுப்பு காவலில் வைப்பதற்காக ரிமாண்ட் விண்ணப்பம் செய்யப் பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்க பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கமருல் ஜமான் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.