NATIONAL

லண்டனில் சிகிச்சையை முடித்துக் கொண்டு நலமுடன் நாடு திரும்பினார் சிலாங்கூர் சுல்தான்

15 ஆகஸ்ட் 2023, 8:48 AM
லண்டனில் சிகிச்சையை முடித்துக் கொண்டு நலமுடன் நாடு திரும்பினார் சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலம், ஆக 15 - லண்டனில்

வெற்றிகரமாகச் சிகிச்சையை முடித்துக்

கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன்

இட்ரிஸ் ஷா தன் துணைவியார் தெங்கு

பெர்மைசூரி நோராஷினுடன் நேற்று

நலமுடன் தாயகம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் ஆட்சியாளரை

அன்புடன் வரவேற்ற சிலாங்கூர் மத்திரி

புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த

இந்த தகவலை தனது முகநூலில்

பகிர்ந்துள்ளார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின்

மருத்துவ சிகிச்சைகள் சிறப்பாகவும்

சுமூகமாகவும் நடந்தன. அவர்

ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும்

இருக்கிறார்.

மாநிலத்தின் குடிமக்களாகிய நாங்கள்

சுல்தான் தம்பதியர் நல்ல ஆரோக்கியம்

மற்றும் சுபிட்சத்துடன் நீண்ட ஆயுளுடன்

வாழ வேண்டும் என்று பிரார்த்தனை

செய்கிறோம் என்று அமிருடின் அந்தப்

பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புரோஸ்டேட் லேசர் அறுவை சிகிச்சைக்காக

கடந்த மாதம் 28ஆம் தேதி லண்டன் சென்ற

சுல்தான் ஷராபுதீனை மேன்மை தங்கிய

அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா

ஷா நேற்று முன்தினம் சென்று கண்டார்.

மாநில ஆட்சியாளர் திரும்பியவுடன் மந்திரி

புசார் மற்றும் ஆட்சிக்குழு

உறுப்பினர்களின் பதவியேற்பு விழா

விரைவில் மேற்கொள்ளப்படும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.