MEDIA STATEMENT

ருக்குன் நெகாரா கிளப் தனியார் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

14 ஆகஸ்ட் 2023, 10:13 AM
ருக்குன் நெகாரா கிளப் தனியார் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

கோலாலம்பூர், ஆக 14 - இளைய தலைமுறையினரிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு தனியார் கல்விக் கூடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ருக்குன் நெகாரா கிளப் விரிவுபடுத்தப்படும்.

ருக்குன் நெகாரா வில் உள்ள ஐந்து கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதிலும் பயன்படுத்துவதிலும் இந்த  கிளப் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.

 நாடு முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கும் இந்த  கிளப், ருக்குன் நெகாரா கோட்பாட்டின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை மாணவர்கள் புரிந்துகொண்டு அமல்படுத்தும் வகையில்  விரிவுபடுத்தப்படுவது முக்கியம் என்றார் அவர்.

இந்த நாட்டின் பலம் உடல்  ரீதியாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக,  அதன் மக்களின் ஆன்மா மற்றும் உணர்வுகளும்  கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் ஒற்றுமைக்கான தலைவர்களாக இந்த ருக்குன் நெகாரா கிளப்புகள் விளங்கும். அதன் அடிப்படையில் இந்த கிளப்புகளை விரிவுபடுத்த விருக்கிறோம். இதற்கு தொடர்பான தகவல்கள்  தொடர்ந்தாற்போல் வழங்கப்படும் என அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.