சிரம்பான் ஆக 11- நாடு மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாளை நடக்கும் ஆறு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணிக்கு திரண்டு வந்து வாக்களிக்கும் படி மனித வள அமைச்சர் சிவகுமார் இந்தியச் சமுதாயத்தை கேட்டுக் கொண்டார்.
நாளை மிகவும் முக்கியமான நாள். ஆறு மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை
நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
இந்த தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல செய்தியாக இருக்க ஆறு மாநில வாக்காளர்கள் திரண்டு வந்து பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக்
கொண்டார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலேசியர்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறந்த முறையில் நாட்டை வழிநடத்தி வருகிறார். மத்திய அரசுடன் இணைந்து ஒத்துழைக்கும் மாநில அரசை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அப்போதுதான் எவ்வித தங்கு தடையின்றி அனைத்து திட்டங்களும்
எளிதாக நிறைவேற்ற முடியும் என்று அவர் சொன்னார்.








