கோம்பாக், ஆக11- மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பணத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களைக் கவரும்
நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் எனத் தாம் நம்புவதாக பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
அரச மலேசியா காவல்துறை, தேர்தல் ஆணையம், மற்றும் மலேசிய ஊழல்
எதிர்ப்பு ஆணையம் ஆகியவை இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
நமது எதிராளிகள்ள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள்
வெளிப்படையாக பல நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. கடைசி நிமிட
உத்தியாக இதனைப் பயன்படுத்துவார்கள் என்று நான் அஞ்சுகிறேன்.
அவர்கள் தொண்டு நடவடிக்கைப் போர்வையில் இதுபோன்றச் செயல்களில்
ஈடுபடலாம். ஜனநாயக ரீதியாக வெற்றி பெற வேண்டும். இத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும் ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
அம்னோவின் தலைவரான அஹ்மட் ஜாஹிட், ஹாவா மலேசியாவின் மடாணி
வேலை வாய்ப்புச் சந்தையின் முன்னோட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான முறையில் போட்டியிட
வேண்டும் என்றும் அரசியல் தொண்டு மூலம் வெற்றியடைய நினைக்கக் கூடாது
ஜாஹிட் என்றும் கூறினார்.








