சுங்கை பாஞ்சாங் தொகுதியில் பக்கத்தான்-பாரிசான் வென்றால் இரயில் சேவை சாத்தியமாகும்- மந்திரி புசார் உத்தரவாதம்

9 ஆகஸ்ட் 2023, 9:51 AM
சுங்கை பாஞ்சாங் தொகுதியில் பக்கத்தான்-பாரிசான் வென்றால் இரயில் சேவை சாத்தியமாகும்- மந்திரி புசார் உத்தரவாதம்

சுங்கை பெசார், ஆக 9- இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் சுங்கை பாஞ்சாங் தொகுதியை பக்கத்தான்-பாரிசான்  கூட்டணி வென்றால் மட்டுமே சுங்கை புசார் வரை இரயில் சேவையை விரிவுபடுத்தும் கனவை நனவாக்க முடியும்.

மாநில அரசை அமைப்பதற்கும் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை பெறுவதற்கும் தேவையான பங்களிப்பை வழங்கும் தொகுதியாக சுங்கை பாஞ்சாங் விளங்க வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளானிலிருந்து சுங்கை புசார் வழியாக சபாக் பெர்ணம் வரை இரயில் சேவை விரிவாக்கம் காண்பதை காண விரும்பினால் சுங்கை பாஞ்சாங் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி செய்வது அத்தொகுதி மக்களின் கடமையாகும் என்று அவர் சொன்னார்.

எம்.ஆர்.டி. இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் சேவை மற்றும் எல்.ஆர்.டி. போன்ற இரயில் சேவைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். ஆகவே மாநில அரசு மத்திய அரசுடன் நீடித்திருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

கம்போங்  ஹாலா பாரு சுங்கை பாஞ்சாங்கில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் ஒற்றுமை தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய போது சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளருமான அவர்  குறிப்பிட்டார்.

சுங்கை பாஞ்சாங் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமது இம்ரான் தம்ரினுக்கும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது ரசாலி ஷாரிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.