பக்காத்தான்  ஹராப்பான்  ஸ்ரீ செர்டாங்  வேட்பாளர் சௌஜானா பூச்சோங் இந்தியர்களை  சந்தித்தார்.

9 ஆகஸ்ட் 2023, 8:25 AM
பக்காத்தான்  ஹராப்பான்  ஸ்ரீ செர்டாங்  வேட்பாளர் சௌஜானா பூச்சோங் இந்தியர்களை  சந்தித்தார்.
பக்காத்தான்  ஹராப்பான்  ஸ்ரீ செர்டாங்  வேட்பாளர் சௌஜானா பூச்சோங் இந்தியர்களை  சந்தித்தார்.

பூச்சோங் ஆகஸ்ட்  8 ;-நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு ஸ்ரீ செர்டாங் பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் அபாஸ் அஸ்மி தனது தொகுதி தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பில் ஒரு பகுதியாக  சௌஜானா பூச்சோங் இந்தியர்களை பூச்சோங் ஸ்ரீ முருகன் மையத்தில் சந்தித்தார்.

சௌஜானா  பூச்சோங் வாழும்  அதிகமான  இந்தியர்கள் வந்திருந்த சந்திப்பில், தான் இதற்கு முன் 2 ஆண்டுகள் சுபாங் ஜெயா நகராண்மை கழக உறுப்பினராக சேவையாற்றியதாகவும்,  இங்குள்ள பிரச்சனைகளை தான் அறிந்து உள்ளதாகவும், அவைகளுக்கான தீர்வை வெகு விரைவில்  காணலாம் என வேட்பாளர் அபாஸ் அஸ்மி  கூறினார்.

இங்குள்ள மக்கள் எந்த பிரச்சனைக்கும்  இங்குள்ள தலைவர்கள் வழி தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றார். பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் நாட்டில் உள்ள எல்லா இன மக்களின் ஒத்துழைப்புடன்  பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுகிறார். அதே போன்று மாநிலத்தை சிறப்பாக வழி நடத்துவதில் மந்திரி புசார்  அமிருடின் ஷாரி  பெரிய பங்களிப்பை  வழங்கியுள்ளார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அமிருடின் ஷாரி தலைமைத்துவத்தில் மேலும் நல்ல வளர்ச்சி மாநிலம் அடையவும், பிரதமருக்கு  உதவியாக வளர்ச்சித் திட்டங்களில் பங்களிக்க ஸ்ரீ செர்டாங் உட்பட எல்லா தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனலின்  வெற்றியை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் மாநிலம் அடைந்துள்ள வெற்றியை நாம் தொடர்ந்து தற்காக்க வேண்டும்,  அதன் ஆட்சியை தற்காத்துக்கொள்ள  ஒவ்வொரு தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

வந்திருந்த  வாக்காளர்கள் ''ஆம்  பக்காத்தான் ஆட்சியை தொடர வேண்டும்''  என கூக்குரலிட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.