NATIONAL

ஆறு மாநிலங்களில் வாக்களிப்பு 15 சதவீதத்தை எட்டியுள்ளது

8 ஆகஸ்ட் 2023, 11:03 AM
ஆறு மாநிலங்களில் வாக்களிப்பு 15 சதவீதத்தை எட்டியுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: இன்று ஆறு மாநிலங்களில் நடைபெறும் மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) முன்கூட்டியே வாக்களிப்பு மற்றும் கோலா திரங்கானு நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தல் (பிஆர்கே) வாக்களிப்பு காலை மணி 9 நிலவரப்படி 15 சதவீதத்தை எட்டியுள்ளது.

கிளந்தான் அதிகபட்சமாக 23 சதவீதம், கெடா மற்றும் பினாங்கில் தலா 22 சதவீதம், திரங்கானுவில் 20 சதவீதம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நெகிரி செம்பிலான் 19 சதவீதத்தைப் பதிவு செய்தது; சிலாங்கூர் 17 சதவீதம், கோலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆரம்ப வாக்குகள் 16 சதவீதமாக பதிவானது.

ஆறு மாநிலங்களில் மாநிலத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 260 ஆரம்ப வாக்குப்பதிவு மையங்கள் இன்று காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

ஒரே நேரத்தில் நடைபெற்ற கோலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காக திரங்கானு காவல் படைத் தலைமையகத்தில் (IPK) மூன்று ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.