கோலாலம்பூர், ஆக 8 - இன்று நடைபெறும் மாநிலத் தேர்தலுக்கான முதல் கட்ட
வாக்களிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை, ஆயுதப் படை மற்றும் காவல்துறை
பணியாளர்கள் விவேகமுடன் வாக்களித்து, வலிமையான மற்றும் திறமையான மாநில
அரசுகளைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுள்ளனர்.
நேர்மையாக பணியாற்றக்கூடிய தலைவர்களைத் தேர்வு செய்யவும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கவும், நிலையான அரசாங்கத்தை உறுதிப்படுத்தவும் சீருடை அமைப்புகள் தங்கள் பொறுப்புகளை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று நடைபெறும் ஆரம்ப வாக்களிப்பில் பங்கு கொள்ளும் அனைத்து சீருடை
அழைப்பினருக்கும் எனது 'மகிழ்ச்சிகரமான வாக்களிப்பு’ வாழ்த்துகள். வாக்குப்பதிவு
சுமூகமாக நடைபெறவும் பிரார்த்திக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கக்கூடிய வேட்பாளர்களைத்
தேர்வுசெய்யுங்கள் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னாதாக காணொளிப் பதிவொன்றை வெளியிட்ட டத்தோஸ்ரீ அன்வார்,
நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த எந்தவிதமான அசம்பாவித
சம்பவங்களும் இல்லாமல் தொடக்க வாக்களிப்பு சமூகமான முறையில்
நடைபெறும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.








