NATIONAL

மாநிலத் தேர்தல்- 98,785 இராணுவ, போலீஸ் படை உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

8 ஆகஸ்ட் 2023, 2:29 AM
மாநிலத் தேர்தல்- 98,785 இராணுவ, போலீஸ் படை உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

கோலாலம்பூர், ஆக 8- ஆறு மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு இன்று

நடைபெறும் தொடக்க வாக்களிப்பில் 98,785 இராணுவ வீரர்களும்

போலீசாரும் தங்கள் துணைவியருடன் ஜனநாயகக் கடமையை

நிறைவேற்றவுள்ளனர்.

இந்த மாநிலத் தேர்தல்களின் ஒரு பகுதியாகத் திரங்கானு மாநிலத்தின்

கோல திரங்கானு நாடாளுமன்றத்திற்கான இடைத் தேர்தலும்

நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்கு

திறக்கப்பட்டு கட்டங் கட்டமாக மூடப்படும்.

இந்த் தேர்தலில் 49,660 இராணுவ வீரர்களும் 47,728 போலீஸ்காரர்களும்

தங்கள் துணைவியருடன் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்வர். இந்த

தொடக்க கட்ட வாக்களிப்புக்கு 260 வாக்களிப்பு மையங்கள் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் கெடா மாநிலத்திலுள்ள 36 தொகுதிகளுக்கும் கிளந்தானில்

உள்ள 45 தொகுதிகளுக்கும் திரங்கானுவில் உள்ள 32 தொகுதிகளுக்கும்

பினாங்கில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சிலாங்கூரில் உள்ள 56

தொகுதிகளுக்கும் நெகிரி செம்பிலானில் உள்ள 36 தொகுதிகளுக்கும்

வாக்களிப்பு நடைபெறுகிறது.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும்

திரங்கானுவில் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில்

கடந்த 2023 ஜூன் மாதம் 21ஆம் தேதி ஆகக்கடைசியாக புதுப்பிக்கப்பட்ட

வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்

அறிவித்துள்ளது.

ஊழல் நிகழ்ந்துள்ள காரணத்தால் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

15வது பொதுத் தேர்தலில் அந்த தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர்

டத்தோ அகமது அம்சாட் ஹஷிம் பெற்ற வெற்றி செல்லாது என திரங்கானு மாநில தேர்தல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.