NATIONAL

சுபாங் தோட்ட மக்களின் வீட்டு உடமைக்கு தீர்வு - இசுவான் காசிம் வாக்குறுதி

7 ஆகஸ்ட் 2023, 9:22 AM
சுபாங் தோட்ட மக்களின் வீட்டு உடமைக்கு தீர்வு - இசுவான் காசிம் வாக்குறுதி

சுபாங். ஆகஸ்ட் 7-  கடந்த 7 ஆண்டுகளாக முறையாகத் தீர்வு காணப் படாமல் முன்னாள் சுபாங் தோட்ட மக்களின் வீட்டு உடமை பிரச்சனை இழுபறி நிலையில் உள்ளது.  இப்பிரச்சனையை மாநில மந்திரி புசார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று முறையாகத் தீர்வு காண்பேன் என்று கோத்த டமன்சாரா தொகுதியின் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் இசுவான் கசிம் வாக்குறுதி அளித்தார்.

எங்கள் வீட்டு பிரச்சனைக்கு முறையான தீர்வு காணுங்கள் என்று தோட்ட மக்கள் கோரிக்கை முன் வைத்தனர். தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்த போது இவ்வாறு கூறினார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் சுபாங் நாடாளுமன்ற தொகுதியின் 3 தவணையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவராசையா கலந்து கொண்டார். இதில் சிலாங்கூர் தமிழ் இன்று மாத இதழ் மற்றும் இணைய தள பத்திரிக்கையின் உயர் அதிகாரியான ஜஸ்தினும் கலந்துக் கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்தை கோத்த டமன்சாரா தொகுதியின் இந்திய சமுதாய தலைவர் திருமதி  தேவி ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக தங்களது வீட்டு பிரச்சனை முறையாக தீர்வு காணப் படாததால் மக்கள் கொதிப்படைந்து இருந்தனர்.

வீட்டு பிரச்சனை தீர்வு கிடைக்காததால் மக்கள் ஆத்திரம் அடைந்திருப்பதை உணர்ந்த இசுவான் முறையாக தீர்வு காண்பேன் என்ற வாக்குறுதியை வழங்கினார்.

ஷா ஆலம் நகராண்மை கழக உறுப்பினராகச் சேவையாற்றியுள்ளார். அப்போது இப்படி பட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளேன். ஆகவே இந்த பிரச்சனைக்கு முறையாக தீர்வு காண்பேன்.

கடந்த காலம் நிகழ்ந்த தவறுகள் எனது காலத்தில் நடக்காது என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்கள் குறித்து முழு விளக்கம் கொடுத்தார் ஜஸ்தின். சிலாங்கூர் மாநில அரசு பிரத்தியேகமாக வழங்கியுள்ள காப்புறுதி திட்டம் குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்விற்கு வருகை புரிந்திருந்த மக்களை வரவேற்று பேசினார் சிவராசா. அவர் சுங்கை பூலோ தொகுதியின் தலைவராக சேவையாற்றி வருகிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.