சிரம்பான், ஆக. 6 – நேற்று அதிகாலை 1.20 மணி அளவில், தாமான் டி'அம்பாங் கோத்தா, லுகுட், போர்ட்டிக்சனில் உள்ள வீடு ஒன்றின் முன் நடந்த சண்டையில் தந்தையைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து 26 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து நள்ளிரவு 12.45 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாகப் போர்ட்டிக்சன் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்ட 49 வயதுடைய நபர் குடி போதையில் இருந்ததாகவும், சந்தேக நபருடன் தகராறு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“சந்தேக நபர் தனது தந்தை வீட்டின் முன் சுயநினைவின்றி இருப்பதாக தெரிவித்தார். தகாத வார்த்தைகளை பேசி சத்தம் போட்ட தனது தந்தையின் நடவடிக்கையில் சந்தேக நபர் திருப்தி அடையாததே இந்த சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது,” .
புக்கிட் பெலண்டோக் சுகாதார மையத்தின் உதவி மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று அதிகாலை 1.15 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதிப்படுத்தியதாக ஐடி ஷாம் கூறினார்.
மேலும், சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.
- பெர்னாமா








