NATIONAL

அதிகமான மலிவு விலை வீடுகள் கட்டுப்படும்- கோம்பாக் செத்தியா தொகுதி

6 ஆகஸ்ட் 2023, 7:32 AM
அதிகமான மலிவு விலை வீடுகள் கட்டுப்படும்- கோம்பாக் செத்தியா தொகுதி

அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் 6: இந்த மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், கோம்பாக் செத்தியா தொகுதியில் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்டுவதற்கு அதன் வேட்பாளர் மாநில அரசிடம் விண்ணப்பிக்க உள்ளதாக  தெரிவித்தார்  டத்தோ மெஹாட் சூர்கர்ணையின் ஓமார்டின்

கோம்பாக் மாவட்டம் அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஒன்றாகும். இங்கு "டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த 200,000 மலிவு விலை வீடுகளை கட்டுவதற்கான திட்டம் மிகவும் சரியானது மற்றும் செயல்படுத்த மிகவும் பொருத்தமானது.

"நான் வெற்றி பெற்றால் முதலில் கோம்பாக் செத்தியாவில் கட்டப்படும் வீட்டு அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மந்திரி புசாரிடம் கோரிக்கை வைப்பேன்," என்று அவர் தாமான் கோம்பாக் ரியாவில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பு நிகழ்வில்  கூறினார்.

மேலும் கோம்பாக் குடியிருப்பாளர்கள் சொந்த வீடுகள் கொண்டிருக்க இந்த திட்டம் உதவும் என்று அவர் கூறினார்.

கோம்பாக் செத்தியா தொகுதியில் கடினமாக உழைத்து நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்த ஒற்றுமை கூட்டணிக்கு  தொண்டர்களுக்கு தனது நன்றினை தெரிவித்தார்.

மாநிலத் தேர்தலில் மெஹாட் சூர்கர்ணையின், ஹில்மன் இடாம் (பெரிகாத்தான் நேஷனல்) மற்றும் சுயேச்சை வேட்பாளரான முகமட் சலீம் முகமட் அலியை எதிர்த்து மும்முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.