NATIONAL

சுங்கை பீசி சாலை மூடும் நடவடிக்கை ஒத்திவைப்பு

4 ஆகஸ்ட் 2023, 2:32 PM
சுங்கை பீசி சாலை மூடும் நடவடிக்கை ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - நாளை  தொடங்கவிருந்த ஃபிரேசர் பிசினஸ் பார்க் மற்றும் லோக் இயூ ரவுண்டாபோட் முன்னால் உள்ள சுங்கை பீசி மற்றும் பெட்டாலிங் ஜெயாவை நோக்கிய ஜாலான் சுங்கை பீசியை மூடும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கோலாலம்பூர் சிட்டி ஹால் (டிபிகேஎல்) தெரிவித்தது.

அதனால், சாலைப் பயனாளிகள் வழக்கம் போல் அவ்வழியைப் பயன்படுத்த முடியும் என்று சிட்டி ஹால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4 வரை இயக்க திட்டமிடப்பட்ட சாலை மூடல் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது என டிபிகேல் தெரிவித்தது. இருப்பினும், எவ்வளவு காலம் ஒத்திவைக்கப்படும் என்பதை டிபிகேல் குறிப்பிடவில்லை.

லோக் இயூ ரவுண்டாபோட்டைப் புதுப்பித்தல் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளைச் செயல்படுத்த மேற்கண்ட வழிகள் மூடப்படும் என்று கோலாலம்பூர் சிட்டி ஹால் தெரிவித்தது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.