NATIONAL

தீ விபத்தில் மூதாட்டி மரணம்

1 ஆகஸ்ட் 2023, 6:40 AM
தீ விபத்தில் மூதாட்டி மரணம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1: பெட்டாலிங் ஜெயாவின்  செக்சன்  5 தில்  உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

69 வயதான உள்ளூர் பெண், பராமரிப்பு  இல்லத்தில் உள்ள ஓர் அறையில் படுக்கையில் இறந்து கிடந்தார்.

அதிகாலை 3.33 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பாக தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 14 உறுப்பினர்களும் இரண்டு இயந்திரங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைவர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், பொதுமக்களால் தீ அணைக்கப்பட்டது தெரியவந்தது. அதே நேரத்தில் இந்த இல்லத்தில் இருந்த 14  பேர்கள் மற்றும் பராமரிப்பு மையத்தின் பாதுகாவலர்கள் தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளனர்

"மீட்புப் பணியாளர்களின் ஆய்வில், முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு அறையில் வயதான பெண் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டனர். பின்னர் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பராமரிப்பு மையம் இல்லத்தின் முழு கட்டமைப்பில் 30 சதவீதம் சேதமடைந்துள்ளதாக வும், சம்பவத்திற்கு காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் வான் முகமட் ரசாலி கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.