NATIONAL

பிரதமரைச் சந்திக்க குவாந்தான் மக்களுக்கு அழைப்பு

1 ஆகஸ்ட் 2023, 4:39 AM
பிரதமரைச் சந்திக்க குவாந்தான் மக்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஜூலை 31: குவாந்தான்  மாரா உயர் தொழில்நுட்ப  இப்னு கல்டூன் கல்லூரியில் (கேகேடிஎம்) நாளை நடைபெறும்  அன்வாரை சந்திப்போம் ``தேம்மு அன்வார்`` அமர்வில் பங்கேற்குமாறு குவாந்தான் மக்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த கால அனுபவத்தின் படி, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகள் அரசியல், அதிகாரம், தத்துவம், மதம் அல்லது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம் என்று பிரதமர் இன்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

" ஆரோக்கியமான மற்றும் புதிய உரையாடல் கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.

மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் குறித்து தலைவர்களை நேரடியாகக் கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று தான் எப்போதும் வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார்.

" மேலும் இது மடாணி சமூக அமைப்பை நோக்கி நாட்டை நகர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்," என்று அவர் கூறினார்.

பகிரப்பட்ட சுவரொட்டியின் அடிப்படையில், ``தேம்மு அன்வார்`` அமர்வு மதியம் 1 மணிக்கு நடைபெறும் மற்றும் இதில் பங்கேற்க temuanwar.com எனும் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.