MEDIA STATEMENT

சிலாங்கூர் பக்காத்தான் ஹரப்பான் , பி.என் கூட்டணியின் கொள்கை அறிக்கை- ஷா ஆலமில்

31 ஜூலை 2023, 3:59 PM
சிலாங்கூர் பக்காத்தான் ஹரப்பான் , பி.என் கூட்டணியின் கொள்கை  அறிக்கை- ஷா ஆலமில்
சிலாங்கூர் பக்காத்தான் ஹரப்பான் , பி.என் கூட்டணியின் கொள்கை  அறிக்கை- ஷா ஆலமில்
சிலாங்கூர் பக்காத்தான் ஹரப்பான் , பி.என் கூட்டணியின் கொள்கை  அறிக்கை- ஷா ஆலமில்

முன் வந்த செய்திகள் சு. சுப்பையா

 

ஷா ஆலம் ஜூலை 31;-   இன்று ஜூலை 31  இரவு  8 மணிக்கு ஷா ஆலம்  டேவான்  மூடா  மூசாவில் சிலாங்கூர் பக்காத்தான் ஹரப்பான் , பி.என் கூட்டணியின் தலைவரும் காபந்து அரசின் மந்திரி புசாருமாகிய அமிருடின்  ஷாரி, ஜ.செ. க துணைத் தலைவர் கோபிந் சிங் டியோ, சிலாங்கூர் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் டத்தோ வீர மெகாட் மாட் மற்றும் அமாண மக்கள் கூட்டணி தலைவர்கள், 56 தொகுதிகளின்  வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான அவர்களின்  ஆதரவாளர்கள்  முன்னிலையில் உற்சாகத்துடன் மிக ஆரவாரமாக பக்காத்தான்  ஹரப்பான்  பி.என் கூட்டணியின் தேர்தல் கொள்கை  அறிக்கையை வெளியிட்டார்,

முன் வந்த செய்தி படி நேர்த்தியான ஆட்சிக்கு நமது சிலாங்கூர் வழங்கும் 5 ஆண்டுகள்  5 உறுதிப்பாடுகள் மற்றும் 51 வாக்குறுதிகளுடன்  அதன் கொள்கைகளின் அறிவிப்பு  வெளியிட்டது.

அவை

1.   வளமான பொருளாதாரம் மற்றும் தரமான கல்வி உயர் வருமான  வேலைவாய்ப்புகளுக்கு வழி

2. என் சமயம் சிலாங்கூரில் ஒரு கண்ணியமான வாழ்க்கையின் ஒளி மற்றும் உத்வேகம்

3. திறமையான ,  ஆக்ககரமான  அரசு சேவைகள்

4. நிலையான, வசதியான மற்றும் வாழ்வுக்கேற்ற  வளர்ச்சி

5. சிலாங்கூர் எல்லா மக்களின்  தேவைகள் மற்றும் நலன் காக்கும்  பரிமிக்க  மாநிலம்என்ற  5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.