NATIONAL

டிஸ்பர்சல் லிங்க் எக்ஸ்பிரஸ்வே (பிஜேடி-லிங்க்) திட்டம் ரத்து செய்யப்படும் - மாநில அரசு முடிவு

31 ஜூலை 2023, 2:01 PM
டிஸ்பர்சல் லிங்க் எக்ஸ்பிரஸ்வே (பிஜேடி-லிங்க்) திட்டம் ரத்து செய்யப்படும் - மாநில அரசு முடிவு

ஷா ஆலம், ஜூலை 31: பெட்டாலிங் ஜெயாவில் டிஸ்பர்சல் லிங்க் எக்ஸ்பிரஸ்வே (பிஜேடி-லிங்க்) அமைப்பதற்கான விண்ணப்பத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முன்வைக்கப்பட்ட திட்டத்தில் தனது தரப்பு திருப்தி அடையவில்லை காரணம் அத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

நிலைத்தன்மை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் சமநிலையை அடையக்கூடிய வளர்ச்சியே மாநில அரசு நிர்வாகத்தின் கொள்கையாகும் என அவர் தெரிவித்தார்.

"சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை குறிப்பாக சமூக அறிக்கையின் அடிப்படையில், சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தில் திருப்தி அடையவில்லை, ஏனெனில் அது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை," என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

முன்மொழியப்பட்ட நெடுஞ்சாலை கட்டுமானமானது செப்டம்பர் 3, 2020 அன்று சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கை கவுன்சிலுக்குக் (MTES) கொண்டு வரப்பட்டதாகவும், பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கு இடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, இத்திட்டம் மாணவர்களுக்குத் தொந்தரவாகவும் மற்றும் அருகிலுள்ள பள்ளி கட்டிடங்களில் விரிசல்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்பட்டது.

இத்திட்டம் டமன்சாராவில் உள்ள பாரு லெம்பா கிள்ளான் டோல் பிளாசா (NKVE)க்குப் பிறகு தொடங்கி புக்கிட் ஜலீல் முடிவடைகிறது.

கிரேட்டர் கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது மற்றும் எதிர்கால வாகன வளர்ச்சிக்கு  ஒப்ப  இந்த திட்டம் அமைவதை காண்பதே நோக்கமாகக் கொண்டது..

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.