NATIONAL

சாலைப் பணிகள் காரணமாக விரைவுச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது

31 ஜூலை 2023, 1:57 PM
சாலைப் பணிகள் காரணமாக விரைவுச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது

குவா முசாங், ஜூலை 31 - மாநில தேர்தல் அன்று மத்திய சாலை (சிஎஸ்ஆர்) உள்ளிட்ட சாலைப் பணிகள் காரணமாக விரைவுச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது என்று பொது பணி அமைச்சகம் (கேகேஆர்) உறுதியளித்துள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  ஏனெனில், வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த அவரவர் சொந்த மாநிலத்திற்குத் திரும்புவார்கள் என அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் கூறினார்.

வாக்குப்பதிவு நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க CSR கட்டுமானம் உட்பட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

360 கிலோமீட்டர் நீளமுள்ள CSR திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அமைச்சகத்தால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்று வருவதாக ரஹ்மான் கூறினார்.

 சிஎஸ்பி திட்ட தொகுப்பு 2யில் சுங்கை சிக்குவின் குறுக்கே ஐந்து புதிய பாலக் கற்றைகள் நிறுவப்படுதல் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஃபெல்டா சிக்கு பகுதி முதல் பலோ (FT008) வரை இரண்டு நாட்களுக்கு சில போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றார்.

இதற்கு மாற்றாக, கோத்தா பாருவில் இருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் ஜாலான் ஃபெல்டா அரிங்கைப் பயன்படுத்தலாம்.

கிழக்கு கடற்கரையில் உள்ள மக்கள், குறிப்பாக கோத்தா பாரு, கோலா கிராய் மற்றும் குவா முசாங்கில் இருந்து லிபிஸ், ரவுப் மற்றும் பெந்தோங் வரை பயணிப்பவர்களின் நலனுக்காக இந்த CSR தொகுப்பு கட்டப் பட்டுள்ளது.

"இத்திட்டத்தை நாங்கள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க இலக்கு வைத்துள்ளோம், இதில் கோத்தா பாருவில் இருந்து காரக் கோலாலம்பூர் நெடுஞ்சாலை அல்லது பெந்தோங்கில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (LPT) வரையிலான அனைத்து தொகுப்புகளும் அடங்கும்," என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.