NATIONAL

ஒன்பது வயது சிறுவன் வீட்டில் இறந்து கிடந்தான்

31 ஜூலை 2023, 8:15 AM
ஒன்பது வயது சிறுவன் வீட்டில் இறந்து கிடந்தான்

தைப்பிங், ஜூலை 31: நேற்று காலை தாமான் பங்லிமா, அசாம் கும்பாங்கில் உள்ள வீடு ஒன்றில் ஒன்பது வயது சிறுவன் இறந்து கிடந்தான்.

காலை 11 மணியளவில் அச்சிறுவன் இறந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தைப்பிங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துட் ஹமீட் கூறினார்.

"காவல்துறையினர் மற்றும் தைப்பிங் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரணத்தை உறுதிப்படுத்தியது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

D10 பேராக் ராயல் மலேசியன் காவல்துறை தடயவியல் குழு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதாகவும், இறப்புக்கான காரணத்தைத் தீர்மானிக்க உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக தைப்பிங் மருத்துவமனை தடயவியல் துறைக்கு எடுத்துச் சென்றதாகவும் ரஸ்லாம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தை காவல் துறையினர் திடீர் மரணம் என வகைப்படுத்தி உள்ளனர், என்றார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.