MEDIA STATEMENT

வேட்பாளரை அறிவோம்- வீ. பாப்பாராய்டு (பந்திங் தொகுதி)

30 ஜூலை 2023, 9:03 AM
வேட்பாளரை அறிவோம்- வீ. பாப்பாராய்டு (பந்திங் தொகுதி)

ஷா ஆலம், ஜூலை 30- வேட்பாளரை அறிவோம் அங்கத்தில் இம்முறை பந்திங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்  பாப்பாராய்டு த/பெ வீரமன் இடம் பெறுகிறார்.

ஹிண்ட்ராப் போராட்டவாதியும் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவருமான பாப்பாராய்டு ஜசெக சார்பில் பந்திங்  தொகுதியில் முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார்.

பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தானை பூர்வீகமாகக் கொண்ட 48 வயதான பாப்பாராய்டு தற்போது ஷா ஆலம் தாமான் ஸ்ரீ மூடாவை இருப்பிடமாகக் கொண்டுள்ளார். இவர், வாவாசான் பொதுநிலைப் பல்கலைக்கழகத்தில் தாராளவாத ஆய்வுகள் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை கடந்தாண்டு முடித்து அதில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றுள்ளார். 

கடந்த 2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அதில் தீவிர ஈடுபாடு காட்டிய தலைவர்களில் ஒருவராக பாப்பாராய்டு விளங்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலில் சிலாங்கூரை பக்கத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 13 ஆண்டுகளாக மாநகர் மன்ற உறுப்பினராக இருந்து வரும் பாப்பாராய்டு மாநகர் மன்றத்தின் கொறடாவாகவும் கணக்காய்வு பிரிவுத் தலைவராகவும் உள்ளார்.

சிலாங்கூர் மாநில ஜசெக துணைச் செயலாளர், கோத்தா ராஜா ஜசெக தொகுதி தலைவர், தாமான் ஸ்ரீ மூடா ஜசெக தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்து வருகிறார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.