NATIONAL

வேட்பாளர் நியமன மையங்கள் உள்ள பெரும்பாலான இடங்களில் வானிலை சீராக உள்ளது

29 ஜூலை 2023, 5:03 AM
வேட்பாளர் நியமன மையங்கள் உள்ள பெரும்பாலான இடங்களில் வானிலை சீராக உள்ளது

கோலாலம்பூர், ஜூலை 29: ஆறு மாநிலங்களில் தேர்தலுக்கான (பிஆர்என்) வேட்பாளர் நியமன மையங்கள் உள்ள பெரும்பாலான இடங்களில் இன்று வானிலை சீராக இருந்ததாக கூறப்பட்டது.

ஷா ஆலம், கோலா சிலாங்கூர், பாசிர் மாஸ், குவா முசாங், தும்பாட் (கிளந்தான்), சிக் (கெடா) மற்றும் சிகாமட் (நெகிரி செம்பிலான்) ஆகிய பகுதிகள் வெயிலாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அலோர் ஸ்டார், கெடாவில் சில பகுதிகளில் காலை 7.45 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

மேலும், கிஜால், திரங்கானுவில் உள்ள நியமன மையத்தைச் சுற்றி உள்ள வானிலை மேகமூட்டத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி அளவில் தேர்தல் ஆணைய (SPR) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்று கூடி, வேட்புமனு தாக்கல் மையத்தைத் திறக்கும் முன் (9 மணி) அவர்களது கடமைகள் குறித்து விளக்கப்பட்டது.

வேட்பாளர் நியமன மையத்தில் செய்தி சேகரிப்பதற்காக அதிகாலையில் இருந்து ஊடகவியலாளர்கள் உள்ளனர்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.