MEDIA STATEMENT

கோம்பாக் தொகுதி  எம்.பி.யின் கோட்டை- என்கிறார்கள் இந்திய ஆதரவாளர்கள்

29 ஜூலை 2023, 4:42 AM
கோம்பாக் தொகுதி  எம்.பி.யின் கோட்டை- என்கிறார்கள் இந்திய ஆதரவாளர்கள்
கோம்பாக் தொகுதி  எம்.பி.யின் கோட்டை- என்கிறார்கள் இந்திய ஆதரவாளர்கள்

செய்தி ; சு.சுப்பையா

கோம்பாக்.ஜூலை 29- கோம்பாக் தொகுதியே சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியின் கோட்டையாக திகழ்கிறது. அவரது நற்சேவையில் இந்தியர்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இம்முறை மந்திரி புசாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது என்று கோம்பாக் கெ அடிலான் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான நந்தகோபாலன் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியில் உள்ள பெரும்பான்மையான இந்தியர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வற்றாத ஆதரவை வழங்கி வெற்றி வாகை சூட காரணகர்த்தாவாக இருக்கின்றனர்.

இத்தொகுதியில் உள்ள இந்தியர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகிறார். ஆலயம், தமிழ்ப் பள்ளி, சமூக அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் மானியம் வழங்கி வருகிறார். இத்தொகுதியில் இந்தியர்கள் எதிர்நோக்கும் குடியுரிமை பிரச்சனைகளுக்கும் முறையான தீர்வு கண்டு வருகிறார். அவரது சேவையை யாரும் குறை சொல்ல முடியாது என்று அவர் கூறினார்

பல இந்திய இளைஞர்கள் மந்திரி புசார் அவர்களின் வேட்பு மனு தாக்கலுக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர். மந்திரி புசாரின் சேவை சிறப்பாக உள்ளன. ஆதலால் தான் இளைஞர்களின் ஆதரவு இம்முறையும் அவருக்கு திரும்பி உள்ளன என்று அவர்கள் ஒன்று சேர தெரிவித்தனர்.

கோம்பாக் வட்டாரத்தில் இந்தியர்கள் இடுகாடு நிலம் 4 ஏக்கர் தான் உள்ளது. இந்தியர்களுக்கு 10 அல்லது 12 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற கோரிக்கையும் மந்திரி புசாரிடம்  வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கு பிறகு இவ் வட்டாரத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் இடுகாடு நிலப் பிரச்சனைக்கு முறையான தீர்வு கிடைக்கும் என்று இளைஞர்கள் மேலும் கூறினர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.