NATIONAL

ஆறு மாநிலங்களில் இன்று வேட்பு மனுத்தாக்கல்- 173 வேட்பு மனு மையங்களில் உச்சக்கட்ட பரபரப்பு

29 ஜூலை 2023, 4:24 AM
ஆறு மாநிலங்களில் இன்று வேட்பு மனுத்தாக்கல்- 173 வேட்பு மனு மையங்களில் உச்சக்கட்ட பரபரப்பு

கோலாலம்பூர், ஜூலை 29- சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில்

நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இன்று காலை வேட்பு

மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது. அம்மாநிலங்களில் உள்ள அனைத்து 173

வேட்பு மனுத் தாக்கல் மையங்களும் இன்று காலை 9.00 மணிக்கு

திறக்கபட்டுள்ளன.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், திரங்கானு

ஆகிய அந்த ஆறு மாநிலங்களில் போட்டியிடும் அரசியல் கட்சி

வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை

தேர்தர் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதற்கு இன்று காலை 10.00 மணி வரை

அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆறு மாநிலங்களிலும் உள்ள 245 தொகுதிகளோடு கோல திரங்கானு

நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும்

இன்று நடைபெறுகிறது.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில்

அத்தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் டத்தோ அகமது அஸ்மாட்

ஹஷிம் பெற்ற வெற்றி செல்லாது என திரங்கானு தேர்தல் நீதிமன்றம்

கடந்த ஜூன் 27ஆம் தேதி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த தொகுதி

காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மாநிலத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு 14

நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும்

தங்களின் பிரசாரத்தை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி நள்ளிரவு 11.59

மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி

நடைபெறவுள்ள வேளையில் தொடக்க வாக்களிப்பு வரும் ஆகஸ்டு 8ஆம்

தேதி நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.