NATIONAL

சிலாங்கூரில மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையைப் பெற முடியும்- ஹராப்பான் நம்பிக்கை

29 ஜூலை 2023, 4:07 AM
சிலாங்கூரில மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையைப் பெற முடியும்- ஹராப்பான் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 29- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத்

தேர்தலில் மூன்றில் இரு மடங்கு தொகுதிகளைப் பெற்று ஆட்சியை

மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சிலாங்கூர் மாநில

பக்கத்தான் ஹராப்பான் நம்புகிறது.

மாநில அரசுக்குப் பொதுமக்கள் வழங்கும் ஆதரவு வலுவுடன் இருப்பது

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கண்காணிப்பின்

வழி தெரிய வந்துள்ளதாக மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ

அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூரில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையைப் பெற முடியும்

என நாம் இன்னும் நம்புகிறேன். வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னர் நாம்

தொடர் தாக்குதல்களை எதர்நோக்கி வருகிறோம். அதற்கு பதிலடியாக

நமது எல்லைகளை வலுப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

நேற்று இங்கு, அதிகாரப்பூர்வ பணிகளுக்காக வழங்கப்பட்ட கார்களை

மாநில அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பின்னர்

செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இன்று வேட்பு மனுத்தாக்கல்

நடைபெறவுள்ள நிலையில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தேர்தல்

நடைபெறவுள்ளது.

சிலாங்கூரில் 56 தொகுதிகளுக்கும் பினாங்கில் 40 தொகுதிகளுக்கும் நெகிரி

செம்பிலானில் 36 தொகுதிகளுக்கும் கெடாவில் 36 தொகுதிகளுக்கும்

கிளந்தானில் 45 தொகுதிகளுக்கும் திரங்கானுவில் 32 தொகுதிகளுக்கும்

தேர்தல் நடைபெறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.