NATIONAL

முற்போக்கான சம்பள உயர்வு கொள்கை ஆகஸ்ட் 7ஆம் தேதி இறுதி செய்யப்படும்

28 ஜூலை 2023, 10:19 AM
முற்போக்கான சம்பள உயர்வு கொள்கை ஆகஸ்ட் 7ஆம் தேதி இறுதி செய்யப்படும்

புத்ராஜெயா, ஜூலை 28: அதிகரித்து வரும் மக்களின் வாழ்க்கைச் செலவை நிவர்த்தி செய்யும் நோக்கில் முற்போக்கான சம்பள உயர்வு கொள்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்று பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கான வெள்ளை அறிக்கையை தனது தரப்பு தயார் செய்துள்ளதாகவும், தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சிலில் சமர்பிக்க அமைச்சர்கள் மட்டத்திலான விவாதங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ரஃபிஸி ரம்லி கூறினார்.

"ஒரு வாரத்திற்குள் நாங்கள் முடிவைப் பெறுவோம். அதன் பின் முற்போக்கான ஊதியம் தொடர்பான சில முக்கிய கொள்கை திசைகளைப் பொதுமைப் படுத்தலாம், பிறகு செயல்முறை தொடங்கப்படும்.

"இந்த முற்போக்கான சம்பளக் கொள்கைகள் அனைத்தும் உண்மையில் மக்களின் சம்பள நிலைமை மற்றும் வருமான நிலையை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன," என்று அவர் இன்று 2022 குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின் விவரங்களை அறிவித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மக்கள் முடிவிற்காக உற்சாகமாக காத்திருக்கின்றனர் இருப்பினும் இன்னும் அவ்வாறு செய்யத் தயாராக இல்லாத முதலாளிகள் மத்தியில் கவலை நிலவி வருவதாக அவர் ஒப்புக்கொண்டார்.

"இந்த முற்போக்கான சம்பளக் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை 71 சதவீதமாக உள்ளது, ஆனால் முதலாளிகள் வருத்தத்தில் உள்ளனர், ஏனெனில் இது செலவுகளை பாதிக்கும் என்பதால் ஆகும்.

"நாங்கள் அதை அறிவோம். அதனால்தான் இந்த முற்போக்கான சம்பள மாதிரி வெற்றியடைந்து, அம்முறையை அறிவிக்கப்படும்போது, முதலாளிகளும் மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

முற்போக்கான சம்பள உயர்வு கொள்கையை செயல்படுத்துவதில் உறுதி செய்வதில் தனியார் துறையின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை ரஃபிஸி கோரினார்.

இந்த நேரத்தில் அரசாங்கத்தின் முன்னுரிமை மக்களின் ஊதியத்தின் வளர்ச்சிக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு க்கும் இடையிலான குறிப்பிடத்தக்க இடைவெளியை குறைப்பதாகும் என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.