கோலாலம்பூர், ஜூலை 28: நாடு முழுவதும் உள்ள பாழடைந்த பள்ளி கட்டிடங்களை மேம்படுத்தும் 1,002 திட்டங்கள் 2016 முதல் 2023 வரை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் RM6.5 பில்லியன் ஒதுக்கியுள்ளது.
ரோலிங் திட்டம் 2023 இல், தொடரும் பழையப் பள்ளிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இந்த நடவடிக்கை என்று கல்வி அமைச்சகம் (கேபிஎம்) இன்று முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
"ரோலிங் திட்டம் 2023 மூலம் நாடு முழுவதும் 417 புதிய மற்றும் நீட்டிப்பு திட்டங்களை செயல்படுத்த மொத்தம் RM923.97 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சபா மற்றும் சரவாக்கில் கல்வி வசதிகள் மேம்படுத்தும் வகையில் 327 பள்ளிகளின் பழையக் கட்டிட மேம்பாட்டு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன என கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்தது.
அனைத்து மலேசியக் குடிமக்களும் தரமான கல்வியைப் பெறுவதற்கான விருப்பத்தை அடைவதற்காகப் பள்ளிக் கட்டிடங்களை பராமரித்து மேம்படுத்தும் முயற்சி எப்போதும் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் முன்னுரிமையாகும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் வலியுறுத்தினார்.
– பெர்னாமா








