MEDIA STATEMENT

பராமரிப்பாளர் கவனிப்பில் 11 மாத பெண் குழந்தை இறந்துள்ளது

27 ஜூலை 2023, 10:09 AM
பராமரிப்பாளர் கவனிப்பில் 11 மாத பெண் குழந்தை இறந்துள்ளது

மலாக்கா, ஜூலை 25: டுயோங்கில் உள்ள அயர் மோலெக் பொது இல்லத்தில் நேற்று காலை 11 மணியளவில் 11 மாத பெண் குழந்தை இறந்ததாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, ஆனால் முழு பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்று மலாக்கா தெங்கா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

"34 வயதான அக்குழந்தையின் பராமரிப்பாளர் கைது செய்யப் படவில்லை மற்றும் இதுவரை வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது," என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

குழந்தையின் பெற்றோருக்கு அந்த பராமரிப்பாளரிடமிருந்து செய்தி கிடைத்துள்ளது, அதாவது அவர்களின் மூத்த மகள் நீல நிற உடலுடன் சுயநினைவின்றி இருப்பதாகவும், மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு குழந்தை பராமரிப்பாளரால் அருகிலுள்ள கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மலாக்கா மருத்துவமனை பின்னர் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது மற்றும் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்க வேண்டியிருப்பதால் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.