ஷா ஆலம், ஜூலை 27: ஆண்டுக்கு RM100,000 மற்றும் அதற்கும் கீழ் வருமானம் பெரும் அனைவருக்கும் இணையம் வழி RM100யை வழங்க புத்ராஜெயா இன்று ஒப்புக்கொண்டது.
இணைய வழி பணம் வழங்கும் திட்டம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.
குறைந்த வருமானம் (B40) மற்றும் நடுத்தர வருமானம் (M40) பெறும் தரப்பினரிடையே இந்த உதவியைப் பெற தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும், அதற்கு அரசு RM1 பில்லியனை ஒதுக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது ," என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் மடாணி பொருளாதாரத்தில் பயணிக்க ” மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கும் போது அவர் இதனை அறிவித்தார்.
முன்னதாக, 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் முழுநேர கல்வியைத் தொடரும் மாணவர்கள் இணையம் வழி RM200யைப் பெற ஜூன் 26 முதல் பதிவு செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்தது.








