NATIONAL

நாட்டின் பொருளாதாரத்தில் , " மக்கள் ஆற்றல் திறனை  மேம்படுத்தும் " திட்டம் – நாளை தொடக்கம்

26 ஜூலை 2023, 10:35 AM
நாட்டின் பொருளாதாரத்தில் , " மக்கள் ஆற்றல் திறனை  மேம்படுத்தும் " திட்டம் – நாளை தொடக்கம்

கோலாலம்பூர், ஜூலை 26:  நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகப்  பொருளாதாரத்தின் புதிய  பரிமாணத்தை நோக்கி , "மடாணி பொருளாதாரம் பயணிக்க '' மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக நாளை தொடக்கி வைப்பார்.

நாளை காலை 9 மணிக்கு புத்ரா ஜெயாவில் உள்ள மலேசியாவின் பங்கு சந்தை துறையின் தலைமையகத்தில் இத்திட்டத்தின் துவக்கம் நடைபெறும்.

மலேசியாவின் பொருளாதாரம் 2023 முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 5.6 சதவீத வளர்ச்சியை குறிப்பாக தனியார் துறையின் மூலம் பதிவு செய்ததுள்ளது

இந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிக்கான கணிப்பை மத்திய வங்கி 4.0 சதவீதம் முதல் 5.0 சதவீதம் வரை  பேங்க் நெகாரா மலேசியா கணித்திருந்ததாக (பிஎன்எம்) தலைவர் டத்தோ அப்துட் ரஷீட் காஃபோர் கூறினார்.

பொருளாதாரம் உள்நாட்டு தேவைகளுக்கு  ஈடுகட்ட கூடியதாகவும், வேலைவாய்ப்பு சந்தை தற்போது மேம்பட்டு வருவதுடன் பயனீட்டாளர்களின்  செலவு கட்டுக்குள் இருக்கிறது.

நாட்டின் பட்ஜெட்டில் இயக்கச் செலவினங்களுக்காக மொத்தம் RM289.1 பில்லியனும், RM2 பில்லியன் தற்செயல் கையிருப்பு உட்பட வளர்ச்சி செலவினங்களுக்காக RM99 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.