சிகிஞ்சான் தொகுதியிலுள்ள 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார் அமைச்சர் சிவகுமார்

26 ஜூலை 2023, 9:23 AM
சிகிஞ்சான் தொகுதியிலுள்ள 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார் அமைச்சர் சிவகுமார்

சபாக் பெர்ணாம், ஜூலை 26- சிலாங்கூர், சபாக் பெர்ணாம்

செகிஞ்சாங் தொகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கு மனிதவள

அமைச்சர் வ. சிவகுமார் இன்று உணவுக் கூடைகளை வழங்கி உதவி

புரிந்தார்.

செகிஞ்சாங் சீனர் கோவில் மண்டபத்தில் இன்று காலையில்

நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர்

சிவகுமார் உணவுக் கூடைகளை நேரடியாக மக்களுக்கு எடுத்து

வழங்கினார்.

உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு இந்த உணவு கூடைகள் பெரும்

உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் செகிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்

உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதே நிகழ்வில், எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெற்ற பத்து மாணவர்கள்

உயர்கல்வியை கற்பதற்கு ஏதுவாக மடிக்கணினிகளையும் அவர்

வழங்கினார்.

குறைந்த வருமானம குடும்பங்களை சேர்ந்த இந்த மாணவர்கள் தங்கு

தடையின்றி உயர் கல்வியை பயில இந்த மடிக்கணினிகள்

வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மடிக்கணினிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் மனித வள

அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.