ECONOMY

சிலாங்கூர் ஜ.செ.க வின் வேட்பாளர்கள் பட்டியலில் 15 இடங்களே !

24 ஜூலை 2023, 7:02 AM
சிலாங்கூர்  ஜ.செ.க வின்  வேட்பாளர்கள் பட்டியலில்  15 இடங்களே !

கோலாலம்பூர்  ஜூலை  24;- இன்று  திங்கட்கிழமை  ஜ.செ.க வின்  தலைமைச் செயலாளர்  போக்குவரத்து அமைச்சருமான  அந்தோனி லோக்  கோலாலம்பூர் புடுவில் வெளியிட்ட  சிலாங்கூர்  ஜ.செ.க வின் வேட்பாளர் பட்டியலில்  40 விழுக்காடு  புதிய முகங்களை கொண்டுள்ளது .

ஏறக்குறைய 35 விழுக்காடு பெண்களுக்கு இடமளித்தும்  உள்ளது.  இந்த மாநில தேர்தலில் , சிலாங்கூர்  ஜ.செ.க  இம்முறை  15 தொகுதிகளில் மட்டுமே  போட்டியிடுகிறது.  அதன் ஒரு தொகுதியை  அம்னோவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது.

பிரதமர்  டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் தலைமையில்  அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில்  இடபெற்றுள்ள கட்சிகளிடையே நிலவும் நல்லிணக்கத்தை காட்டுகிறது.  பக்காத்தான் கூட்டணி  ஆட்சியில் நிலவும் , நல்லுறவுக்கும்  புரிந்துணர்வையும்  உணர்த்துவதாக அமைந்துள்ளது. என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சிலாங்கூரில்  ஜ.செ.க வின்  வேட்பாளர்கள்  அவர்கள் போட்டியிடும்  தொகுதிகள் பின்வருமாறு

N04  சிக்கிஞ்சான்       இங் சுய் லிம்

N06   கோலப்குபு பாரு    லீ கீ ஹியோங்

N22  திராத்தாய் - இவ் ஜியா ஹர்

N27 பாலகோங் - ஓங் சுன் வெய்

N28  ஸ்ரீ கெம்பாங்கான்  வோங் சியூ கி

N30  கின்றாரா- இங் ஸி ஹங்

N31  சுபாங் ஜெயா மிச்செல் இங் மெய் ஸ்ஸே

N34  புக்கிட் காசிங் -  ராஜீவ் ரிஷ்யாகரன்

N35  கம்போங் துங்கு-  லிம் யி வெய்

N36  பண்டர் உத்தமா- ஜமாலியா ஜமாலுதீன்

N45  பண்டார் பாரு கிள்ளான்  குவா பெர்ங் ஃபீ

N47  பாண்டமாரன் லியோங் டக் சீ

N50  கோத்தா கெமுனிங் - பிரகாஸ் சம்புநாதன்

N52 பந்திங் - பப்பாராய்டு

N56 சுங்கை பீலேக்- வி கியான் கியோங்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.