NATIONAL

அமைச்சர் சலாவுடின் மறைவுக்கு மந்திரி புசார் அனுதாபம்

24 ஜூலை 2023, 2:40 AM
அமைச்சர் சலாவுடின் மறைவுக்கு மந்திரி புசார் அனுதாபம்

ஷா ஆலம், ஜூலை 24 -உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப் மறைவுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பாடுபட்ட உறுதியான கொள்கை பிடிப்பு கொண்ட தலைவராக சலாவுடின்  விளங்கினார் என்று அமிருடின் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவின அமைச்சை அவர் தன் வசம் வைத்திருந்தார். சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு உதவுவது குறித்து எதையும்  விவாதிக்க அவர் எப்போதும்  தயாராக இருந்தார் என அவர்

குறிப்பிட்டார்.

பூலாய் நாடாளுமன்ற  உறுப்பினரான சலாவுடின்  உடல் நலக்குறைவு  காரணமாக கடந்த  வெள்ளிக்கிழமை அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு மூளையில்  ரத்தக்கசிவு  ஏற்பட்டதை  கண்டறிந்த மருத்துவர்கள் உறுதி செய்து  உடனடியாக  அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு  அவர் ஆபத்தான நிலையில்  இருந்ததால் தீவிர சிகிச்சைப்  பிரிவில் கண்காணிப்பில் வைக்கப் பட்டார். ஆனால்,  இரவு 9.23 மணிக்கு அவர் காலமானார்.

சலாவுடினுக்கு  டத்தின் பாத்திமா தாஹா என்ற மனைவியும் ஆறு   பிள்ளைகளும் உள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.