NATIONAL

கம்போங் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமாயின

23 ஜூலை 2023, 5:12 AM
கம்போங் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமாயின

கோலாலம்பூர், ஜூலை 23: நேற்று நள்ளிரவு ஜாலான் ராஜா உடா, கம்போங் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமானது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து நள்ளிரவு 12.08 மணி அளவில் தகவல் கிடைத்தவுடன் தித்திவங்சா, ஜாலான் ஹாங் துவா மற்றும் ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செயல்பாட்டுத் துணை தீயணைப்புத் தலைவர் II அர்மடான் மஹத் தெரிவித்தார்.

"சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வந்தபோது, இரண்டு வீடுகள் தீயினால் முழுமையாக அழிந்திருந்தது கண்டறியப்பட்டது.

"தீ விபத்துக்கான காரணம் தடயவியல் விசாரணையில் உள்ள நிலையில், இந்த சம்பத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.