MEDIA STATEMENT

கெடா மந்திரி புசாருக்கு நாவடக்கம் தேவை. அக்மால் வழியுறுத்து

13 ஜூலை 2023, 5:09 PM
கெடா மந்திரி புசாருக்கு நாவடக்கம் தேவை. அக்மால் வழியுறுத்து
கெடா மந்திரி புசாருக்கு நாவடக்கம் தேவை. அக்மால் வழியுறுத்து

செய்தி சு. சுப்பையா

கோல.சிலாங்கூர். ஜூலை.12-  ஒரு சில நாட்களுக்கு முன்பு செலாயாங் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிலாங்கூர் சுல்தான் மற்றும் மாநில மந்திரி புசாரையும் பற்றி அநாகரிகமாக கெடா மந்திரி புசார்  விமர்சித்தார்  என்று அவரைக் கண்டித்து வீடமைப்பு ஊராட்சி  துணை அமைச்சர் அக்மால்  பேசினார்.

அரசியல் தலைவர்கள் இனம், சமயம் மற்றும் சுல்தான் மீது அவதூறாக பேசக் கூடாது என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் பாஸ் கட்சியை சேர்ந்த கெடா மந்திரி புசாரான சனுசி அரண்மனைக் குறித்தும் பொது மேடைகளில் அவதூறாக பேசி வருகிறார்.

குறிப்பாக சிலாங்கூர் மந்திரி புசாரின் உயரம் குறித்து பொது மேடைகளில் நக்கலாக பேசி வருகிறார்.

கெடா மந்திரி புசார் மீது ஆடம்பர வாகனங்கள் குறித்து கேள்வி எழுந்தது. அப்போது அவரது வாகனம் அல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இப்போது ஆடம்பர வீடு வாங்கியிருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில்.பரவலாக பேசப்படுகிறது. இந்த ஆடம்பர வீடு தனது அண்ணனுடையது என்று அவர் கூறி வருகிறார்

அரசியல்.பொது மேடைகளில் இஸ்லாம் மற்றும் அரண்மனை குறித்தும் அவதூறாக பேசி வருகிறார் . இதற்கு எதிராக போலீஸ் படை விசாரணை தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதே போல் கோல சிலாங்கூர் மக்கள் நீதிக் கட்சியின் தொகுதி தலைவர் தீபன் சுப்ரமணியமும் சனுசிக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப் போவதாக கூறினார்..சிலாங்கூர் முழுவதும் சனுசி மீது கடுங் கோபம் கொண்டுள்ளனர் மக்கள் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.