NATIONAL

12 மற்றும் 15 வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு - தந்தை கைது

12 ஜூலை 2023, 7:56 AM
12 மற்றும் 15 வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு - தந்தை கைது

ஷா ஆலம், ஜூலை 12: மூவாரில் 2017 ஆம் ஆண்டு முதல் 12 மற்றும் 15 வயதுடைய தனது இரு குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் தந்தையைக் (53) காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந் நபர் கைது செய்யப்பட்டதாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் கூறினார்,

“சந்தேக நபர் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்" என்று உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் போர்ட்டல் மூலம் தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாகச் சந்தேக நபர் ஜெராமில் உள்ள தனது சொந்த வீட்டில் அந்த இரு குழந்தைகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 10 கசையடிகளும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டப்பிரிவு 376(3) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.