MEDIA STATEMENT

கோம்பாக் மலிவு விற்பனைக்கு 400க்கும் மேற்பட்டோர் வருகை

11 ஜூலை 2023, 2:25 PM
கோம்பாக் மலிவு விற்பனைக்கு 400க்கும் மேற்பட்டோர் வருகை

கோம்பாக், ஜூலை 11: கம்போங் நகோடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கோம்பாக் மலிவு விற்பனைக்கு 400க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர், இந்த விற்பனை பெரும்  வரவேற்பை பெற்றது..

இந்தத் திட்டம் குடியிருப்பாளர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் ஏற்பாடு செய்யப்படுவதை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர் என சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (பிகேபிஎஸ்) கிடங்கு அதிகாரி சம்சியா சம்சுடின் கூறினார்.

"இதுவரை, விற்பனை சீராகவும் முறையாகவும் நடைபெற்று வருகிறது. மேலும் நாடாளுமன்றத்துடனான ஒத்துழைப்பும் நன்றாக உள்ளது. சிலாங்கூர் மக்களில் பெரும்பாலோர் ஏற்கனவே இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே வரவேற்பு சிறப்பாக இருப்பதைக் காணலாம்," என்று அவர் கூறினார்.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.