NATIONAL

ஓய்வுப் பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளி மானியம்

11 ஜூலை 2023, 8:12 AM
ஓய்வுப் பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளி மானியம்

புத்ரா ஜெயா ஜூலை 11-

தேசிய பணி ஓய்வுப் பெற்ற மலேசிய

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சமூக நல

சங்கத்திற்கு மனித வள அமைச்சர்

சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி

பேருதவி புரிந்தார்.

சங்கத்தின் உதவித் தலைவர் டாக்டர் கே.

கன்னியப்பன், செயலாளர் ஆர்.

ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ஆர்.

கோவிந்தசாமி மற்றும் செயலவை

உறுப்பினர் கே சொக்கநாதன் ஆகியோர்

நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள

அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து

உரையாடினர்.

ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின்

நலனை காக்கும் பொருட்டு

அமைக்கப்பட்ட இந்த சங்கம் ஒவ்வொரு

ஆண்டும் தனது ஆண்டு கூட்டத்தில் பத்து

ஆசிரியர்களுக்கு தொக்கோ குரு

விருதையும் தலாஆயிரம் வெள்ளியை

வழங்கி உதவி புரிந்து வருகிறது.

வரும் ஜூலை 22, 23 ஆம் தேதிகளில்

ஈப்போ நகரில் இந்த சங்கத்தின் ஆண்டுக்

கூட்டம் நடைபெறும் வேளையில்

சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில்

மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று

10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்

என்பது குறிப்பிடத்தக்கது.

10,000 வெள்ளி மானியத்தை பெற்றுக்

கொண்ட தேசிய பணி ஓய்வுப் பெற்ற

மலேசிய தமிழ் ஆசிரியர் சங்கத்தின்

பொறுப்பாளர்கள் மனித வள

அமைச்சருக்கு தங்களது நன்றியைத்

தெரிவித்துக் கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.