NATIONAL

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் அன்வார் மரிமாதை நிமித்தச் சந்திப்பு

10 ஜூலை 2023, 9:42 AM
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் அன்வார் மரிமாதை நிமித்தச் சந்திப்பு

புத்ராஜெயா, ஜூலை 10 - இருதரப்பு

பாதுகாப்பு ஒத்துழைப்பை

மேம்படுத்துவதற்காக மலேசியாவிற்குத்

தனது முதல் பயணத்தை

மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று

மரியாதை நிமித்தச் சந்திப்பை

நடத்தினார்.

பெர்டானா புத்ராவில் நடைபெற்ற

இந்தக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசானும்

கலந்துகொண்டார். இரு தலைவர்களும்

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும்

சர்வதேச விவகாரங்கள் குறித்தும்

கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான

பாதுகாப்பு ஒத்துழைப்பை மறுமதிப்பீடு

செய்வதற்காக மலேசியா மற்றும் இந்திய

பாதுகாப்பு அமைச்சுகள் கையெழுத்திட்ட

புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வையும்

அன்வார் பார்வையிட்டார்.

மலேசியாவிற்கு நேற்று

தனது பணி பயணத்தை தொடங்கிய

ராஜ்நாத், கோலாலம்பூரில் உள்ள தற்காப்பு

அமைச்சில், அமைச்சர் முகமதுவுடன்

ஹசானுடன் இருதரப்பு சந்திப்பு

நடத்தினார்.

ராஜ்நாத் இந்தியாவின் பாதுகாப்பு

அமைச்சராக மே 2019 இல்

நியமிக்கப்பட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.